திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது ஆந்திர அரசு
திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது ஆந்திர அரசு
ADDED : செப் 24, 2024 07:26 PM

அமராவதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு இன்று ( செப்.,24) உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி கோயில் புனிதத்தை அசுத்தப்படுத்தி விட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இதையடுத்து இன்று (செப்.,24) ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் டி.ஐ.ஜி., மற்றும் ஒரு எஸ்.பி., மற்றும் இரு டி.எஸ்.பி.க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்குழு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்., ஆட்சியில் லட்டு பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.