காலம் தவறிய ஜெகன்நாதர் ரத யாத்திரை: 'இஸ்கான்' அமைப்புக்கு கண்டனம்
காலம் தவறிய ஜெகன்நாதர் ரத யாத்திரை: 'இஸ்கான்' அமைப்புக்கு கண்டனம்
ADDED : ஜன 06, 2026 12:31 AM

புரி: உலகம் முழுதும் புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையை காலம் தவறி நடத்தும், 'இஸ்கான்' அமைப்புக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த, 24 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்ற புரி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
ஒடிஷா மாநிலம் புரியில், 12ம் நுாற்றாண்டை சேர்ந்த பழமையான ஜெகன்நாதர் கோவில் உள்ளது.
விழிப்புணர்வு
இந்த கோவிலின் உலக பிரசித்தி பெற்ற ரத யாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஜூலையில் நடக்கும். இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் மாயாபூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'இஸ்கான்' எனப்படும், சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் அமைப்பு, புரி கோவில் நிர்வாகத்துடன் முரண்படும் விதமாக வெளிநாடு களில் காலம் தவறி ஜெகன்நாதர் ரத யாத்திரை யை நடத்துகிறது.
உலகம் முழுதும் ஒரே நாளி ல் புரி ஜெகன்நாதர் யாத்திரையை ஒரே திதியில் அல்லது ஒரே நாளில் நடத்த வாய்ப்பில்லை என்றும் இஸ்கான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜப்பான் உள் ளிட்ட 24 நாட்டு பக்தர்கள் பங்கேற்ற மூன்று நாள் ஜெகன்நாதர் மா நாடு புரியில் நேற் று முன்தினம் முடிவடைந்தது.
உலகளாவிய ஸ்ரீ ஜெகன்நாதர் சிந்தனை மற்றும் உணர்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டை, புரி சங்கராச்சாரியார் துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் ரத யாத்திரை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொருளாளர் பகவான் பாண்டா கூறுகையில், ''ஹிந்து வேதங்கள் மற்றும் புராண முறைப்படி நடத்தாமல் இஸ்கான் அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் காலம் தவறி ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்துகிறது. இதற்கு எதிராக, விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்,'' என்றார்.
ஏற்க முடியாது
நிகழ்ச்சியில் ஸ்ரீஜெகன்நாதர் கோவில் நிர்வாக குழு தலைவர் திவ்யசிங்கா தேவ் பேசியதாவது: சாஸ்திரத்தின் படி வெளிநாடுகளில் ரத யாத்திரையை இஸ்கான் நடத்தாதது கவலையளிக்கிறது. காலம் தவறி நடத்தப்படும் ரத யாத்திரையை ஏற்க முடியாது. அதேபோல் மேற்கு வங்கத்தின் திகா கோவிலை 'ஜெகன்நாதர் தாம்' என்று கூறுவதை ஏற்க முடியாது. கடவுள் வீற்றிருக்கும் புரி கோவில் மட்டுமே 'தாம்' என அழைக்கும் தகுதி பெற்றது. இவ்வாறு அவர் பேசினார்.

