எம்.எல்.ஏ., ஓய்வூதியம் கேட்டு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்
எம்.எல்.ஏ., ஓய்வூதியம் கேட்டு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்
ADDED : ஆக 31, 2025 01:38 AM

ஜெய்ப்பூர்: முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராஜஸ்தானின் முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்த தற்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, ஜூலை 21ல், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த அவர், 1993 - 98 வரை கிஷன்கர் தொகுதியின் காங்., - எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார்.
கடந்த 2019 ஜூலை வரை முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கான ஓய்வூதியம் ஜக்தீப் தன்கருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டதும், நிறுத்தி வைக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கான ஓய்வூதியம் கேட்டு, பா.ஜ., ஆளும் ராஜஸ்தான் அரசிடம் தன்கர் விண்ணப்பித்து உள்ளார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க் களுக்கு மாதம், 35,000 ரூபாய் வரை வழங்கப்படும் ஓய்வூதியம், அவர்கள் 70 வயதை அடைந்தவுடன், 20 சதவீதம் அதிகரிக்கப்படும்.
இதன்படி, தற்போது 74 வயதாகும் ஜக்தீப் தன்கருக்கு, ஓய்வூதியமாக மாதம், 42,000 ரூபாய் கிடைக்கும்.

