இப்படி ஒரு அமெரிக்க அதிபரை உலகம் கண்டது இல்லை; ஜெய்சங்கர்
இப்படி ஒரு அமெரிக்க அதிபரை உலகம் கண்டது இல்லை; ஜெய்சங்கர்
ADDED : ஆக 23, 2025 02:31 PM

புதுடில்லி: ''வெளியுறவு கொள்கையை இப்படி வெளிப்படையாக அனைவரது முன்னிலையில் செயல்படுத்தும் அமெரிக்க அதிபரை இதுவரை உலகம் கண்டதில்லை'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், ''இந்தியாவின் கொள்கைகள் அதன் தேசிய நலனுக்காகவே இருக்கும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தி உள்ளார்.
இது குறித்து டில்லியில் நடந்த உலக தலைவர்கள் மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியதாவது:
வெளியுறவு கொள்கையை இப்படி வெளிப்படையாக அனைவரது முன்னிலையில்
செயல்படுத்தும் அமெரிக்க அதிபரை இதுவரை யாரும் கண்டதில்லை. இது ஒரு மிகப்பெரிய மாற்றம். இந்தியாவுக்கு மட்டுமில்லை, உலக நாடுகள் மட்டுமின்றி சொந்த நாட்டையும் டிரம்ப் கை யாளும் அணுகுமுறை வழக்கமான நடை முறை களில் இருந்து மிகவும் மாறுப்பட்டதாக உள்ளது.
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தங்களில் சிக்கல் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கோட்பாடு, கொள்கைகள் உள்ளன. இந்தியாவின் கொள்கைகள் அதன் தேசிய நலனுக்காகவே இருக்கும். இந்தியா தனது தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. கடந்த 2022ம் ஆண்டில் எண்ணெய் விலை உயர்ந்த காரணத்தினால் சர்வதேச அளவில் பதட்டம் நிலவியது.
எண்ணெய் விலைகளை உயர்வை கட்டுப்படுத்தவும், சரியான விலையை உறுதி செய்யவும் நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறோம்.
ரஷ்யா உடன் வர்த்தகத்தை நாங்கள் அதிகரிக்க விரும்புகிறோம். அதேநேரத்தில் உக்ரைன் போரில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் பிரச்னைக்கு விரைவில் முடிவு காண விரும்புகிறேன். விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.