ADDED : ஆக 09, 2024 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலே: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று மாலத்தீவு செய்கிறார்.
இந்தியாவின் நட்புறவு நாடாக மாலத்தீவு உள்ளது. எனினும் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக தேர்வு செய்யப்பட்ட முகமது முய்சு, சீன ஆதரவாளாக உள்ளார்.
இந்நிலையில் பிரதமராக மோடி மூன்றாம் முறையாக பதவியேற்பு விழாவில் முகமது முய்சு பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக மாலத்தீவில் புதிய அமைச்சர் குழு பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு செல்கிறார்.