ADDED : செப் 24, 2024 07:29 AM
மைசூரு: ''மைசூரு தசராவின் ஜம்பு சவாரியை பார்க்க விரும்புவோருக்கு தங்க பாஸ் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடப்பாண்டு தசரா ஜம்பு சவாரியை காண விரும்புவோருக்கு, தங்க பாஸ் வழங்கப்படும். இதன் கட்டணம் 6,500 ரூபாய். இதன் மூலம், இருவர், அரண்மனை வளாகத்தில் இருந்தபடி ஜம்பு சவாரியை காணலாம். பன்னி மண்டபத்தில் நடக்கும் சாகச நிகழ்ச்சி, சாமுண்டி மலை, மிருகக்காட்சி சாலை, அரண்மனைக்குச் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது மட்டுமின்றி 3,500 ரூபாய் தங்க பாஸுக்கு, அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரியை பார்க்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். இத்துடன் கூடுதலாக 1,000 ரூபாய் செலுத்தினால் பன்னி பண்டபத்தில் நடக்கும் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். செப்., 26 முதல் 30ம் தேதி வரை, ஆன்லைனில் மூலம் 1,000 முதல் 1,500 தங்க பாஸ்கள் வாங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.