ADDED : ஜன 21, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு கல்லேக்காடு அருகே செயல்படும் ஜாமியா ஹசனியா அமைப்பின் வளாகத்தில், கல்லூரிகள், கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இந்த அமைப்பின் 30ம் ஆண்டு விழா வரும், 24, 25, 26 தேதிகளில் நடக்கிறது.
வரும் 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு, மகாராஷ்டிரா சன்னி மத அமைப்பின் தலைவர் முப்தி மவுலானா முஜ்தபா சரீப் சாஹிப் விழாவை துவக்கி வைக்கிறார். கேரளா ஹஜ் கமிட்டி தலைவர் ஹுசைன் சகாபி, கலால் துறை அமைச்சர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
வரும், 26ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், சன்னி அமைப்பின் மாநில நிர்வாகி, காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் துவக்கி வைக்கிறார். இதில் விளையாட்டு துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான், எம்.பி., ஸ்ரீகண்டன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில், 170 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்படுகிறது.