ADDED : அக் 09, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில், 'நோட்டா'வுக்கு முறையே 0.38 சதவீதமும், 1.48 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது தெரிய வந்துள்ளது.
இரு மாநிலங்களிலும் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு, தலைமை தேர்தல் கமிஷன் முடிவுகளை அறிவித்தது. இதன்படி, இந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் வாக்காளர்கள் பலர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் 'நோட்டா'வுக்கு ஓட்டளித்தது தெரியவந்துள்ளது.
ஹரியானாவில், 0.38 சதவீத வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர்; ஜம்மு - காஷ்மீரில் 1.48 சதவீதம் பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2013 முதல், நோட்டாவுக்கு ஓட்டளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.