sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: வெற்றி தோல்வியடைந்த வி.ஐ.பி.,கள்

/

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: வெற்றி தோல்வியடைந்த வி.ஐ.பி.,கள்

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: வெற்றி தோல்வியடைந்த வி.ஐ.பி.,கள்

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: வெற்றி தோல்வியடைந்த வி.ஐ.பி.,கள்

2


UPDATED : அக் 08, 2024 07:38 PM

ADDED : அக் 08, 2024 12:52 PM

Google News

UPDATED : அக் 08, 2024 07:38 PM ADDED : அக் 08, 2024 12:52 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பது பற்றி விபரங்கள் வருமாறு:

காஷ்மீரில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் களத்தில் இறங்கிய முக்கிய வேட்பாளர்களில் வெற்றி பெற்றது யார்? என்பது குறித்து பார்க்கலாம்.

Image 1330365

தாரிக் ஹமீத் (காங்கிரஸ்)

மத்திய ஷால்தெங் தொகுதியில் காங்கிரஸ் சார்பில்,போட்டியிட்ட முன்னாள் லோக்சபா எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தாரிக் ஹமீத் கர்ரா 14,395 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Image 1330366

பா.ஜ., தலைவர்கள்

ஜம்மு காஷ்மீர் பா.ஜ., தலைவரான ரவீந்தர் ரெய்னா, நவுசேரா தொகுதியில் 7,819 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

Image 1330367

தேவேந்திர சிங்

நக்ரோடா தொகுதியில் போட்டியிட்ட காஷ்மீர், முக்கிய பா.ஜ., தலைவரான தேவேந்திர சிங் ராணா 30472 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Image 1330368

உமர் அப்துல்லா

முன்னாள் முதல்வரான இவர் பரூக் அப்துல்லாவின் மகன். இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கந்தர்பால் மற்றும் புட்காம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

அதில், கந்தர்பால் தொகுதியில் 10,574 ஓட்டு வித்தியாசத்திலும்

புட்காம் தொகுதியில் 18, 485 ஓட்டு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

Image 1330369

மெகபூபா மகள்

பிஜ்பெஹாரா சட்டசபை தொகுதியில், களமிறங்கிய மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி 9,770 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us