ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: காங்., தேசிய மாநாட்டு கட்சி தொகுதி உடன்பாடு
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: காங்., தேசிய மாநாட்டு கட்சி தொகுதி உடன்பாடு
ADDED : ஆக 26, 2024 08:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 இடங்களை கொண்ட இம்மாநில சட்டசபைக்கு வரும் செப். 18, செப்.25, அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக். 04 ஓட்டு எண்ணிக்ககை நடக்கிறது.
இத்தேர்தலில் பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியுடன், தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
இதன் படி இன்று வெளியான அறிவிப்பில், தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்., 32 இடங்களிலும் மற்றும் இதர தோழமை கட்சிகள் 5 இடங்களிலும் போட்டியிடுவது என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.