பயங்கரவாத சதி முறியடிப்பு: காஷ்மீரில் 9 பேரை கொத்தாக அள்ளிய போலீசார்
பயங்கரவாத சதி முறியடிப்பு: காஷ்மீரில் 9 பேரை கொத்தாக அள்ளிய போலீசார்
UPDATED : ஆக 14, 2024 01:54 PM
ADDED : ஆக 13, 2024 11:37 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய, 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகிறது. சமீபத்தில் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.
9 பேருக்கு காப்பு
இந்நிலையில், எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய, கட்டால் கிராமத்தை சேர்ந்த மன்னன் முகமது லத்தீப், அக்தர் அலி, சதாம் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தோடா, உதம்பூர் மற்றும் கதுவா மாவட்டங்களில் வசித்து வந்துள்ளனர்.
பயங்கரவாத சதி
இவர்கள் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு ஊடுருவி வரவும், உணவு, தங்குமிடம் கிடைக்கவும், தகவல் தரவும் உதவியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.