தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜன் தன் எங்கள் திட்டம்!

ஜன் தன் எங்கள் திட்டம்!

ஜன் தன் எங்கள் திட்டம்!


ADDED : ஆக 30, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு திட்டம் குறித்த யோசனையை முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் தந்தார்; அது 2005ல் காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. 2014 வரை பல கோடி வங்கிக் கணக்குகள் இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டன. மோடி அரசு அத்திட்டத்தின் பெயரை ஜன் தன் என மாற்றியது.

சிதம்பரம், மூத்த தலைவர், காங்கிரஸ்

மேற்கு வங்க கிம் ஜாங் உன்!


மேற்கு வங்கத்தில் கலவரம் வெடித்தால், அசாம், உ.பி., பீஹார், ஒடிசா, டில்லியிலும் கலவரம் வெடிக்கும். பிரதமர் நாற்காலி கவிழும் என்று பேசியுள்ளார் மம்தா. வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் போன்று எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார் அவர். இது ஜனநாயக பண்பு அல்ல.

கிரிராஜ் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,

கவலை தருகிறது!


மேற்கு வங்கம், மஹாராஷ்டிராவின் பத்லாபூர், உத்தர பிரதேசத்தின் கன்னோஜ், ஆக்ரா மற்றும் பரூகாபாத் ஆகிய இடங்களில் அப்பாவி பெண்கள் மற்றும் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தமும், கவலையும் அளிக்கிறது.

மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us