ADDED : பிப் 14, 2024 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ, பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும், 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேச எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி, ராஜ்யசபா எம்.பி., தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி., வெற்றி பெற, 37 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.
உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி கட்சிக்கு, 108 எம்.எல்.ஏ.,க் களும், காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இதனால் மூன்று பேரை அவர்களால் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய முடியும்.
இதற்காக ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., ஆக இருந்த ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்ஜி லால் சுமன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலோக் ரஞ்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

