sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப்

/

தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப்

11


UPDATED : பிப் 20, 2025 02:53 PM

ADDED : பிப் 20, 2025 02:28 AM

Google News

UPDATED : பிப் 20, 2025 02:53 PM ADDED : பிப் 20, 2025 02:28 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், உக்ரைனை ஒதுக்குகிறார்.

உக்ரைனில் 2019ல் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி, நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.

இதைக் குறிப்பிடும் வகையில், டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள செய்தி:

ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து, போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்.

அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும்.

இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us