sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

/

ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

1


ADDED : மார் 10, 2025 05:55 PM

Google News

ADDED : மார் 10, 2025 05:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்டில், பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கருகி பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ரன்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோடர்மனா பஜாரில் பட்டாசுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்துள்ளது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

தொடர்ந்து மளமளவென கடை முழுவதும் தீ பரவியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்றனர்.

பலியான 5 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார்வா எஸ்.பி., தீபக் பாண்டே கூறுகையில்,'இங்குள்ள ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் மூன்று குழந்தைகள் அடங்குவர். சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கார்வா பகுதியில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியானது அறிந்து வருத்தம் அடைந்தேன். பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு கடவுள் வலிமை தரட்டும். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது என்று கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us