ஜார்க்கண்ட் பா.ஜ., வேட்பாளர் பட்டியல்; சீதா சோரன்; சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு
ஜார்க்கண்ட் பா.ஜ., வேட்பாளர் பட்டியல்; சீதா சோரன்; சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு
ADDED : அக் 19, 2024 07:46 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று பா.ஜ., வெளியிட்டது.
81 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்ய ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலை சந்திக்கின்றன.
பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.,10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த., 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி., ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு நேற்று அறிவித்தது.
இந்நிலையில் பா.ஜ., முதற்கட்டமாக, 66 வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
முதற்கட்ட பட்டியலில் முக்கிய வேட்பாளர்கள்:
ஜார்க்கண்ட் மாநில பா.ஜ. தலைவர் பாபுலால் மராண்டி, தன்வார் தொகுதியிலும், லோபின் ஹெ ம்ப்ரோம், போரியோ தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
கீதாபாய்முசு, சாய்பசாவில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் மது கோடா மனைவி கீதா கோடா, ஜகன்நாத்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மீரா முண்டா, போட்கா தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.