ஜார்க்கண்ட் முதல்வரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
ஜார்க்கண்ட் முதல்வரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜன 20, 2024 01:57 PM

ராஞ்சி: 7 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜர் ஆகாத ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு, சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நில அபகரிப்பு மோசடியின் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜர் ஆக வேண்டும் என ஏழு முறை அவருக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. இதுவரை விசாரணைக்கு ஹேமந்த் சோரன் ஆஜர் ஆகவில்லை.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றனர். ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.