ஜார்கண்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம்: ரூ.25 கோடி பறிமுதல்
ஜார்கண்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம்: ரூ.25 கோடி பறிமுதல்
UPDATED : மே 06, 2024 10:48 AM
ADDED : மே 06, 2024 09:15 AM

ராஞ்சி: ஜார்கண்டில் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடிக்கும் அதிகமான பணம் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்கண்டில் வரும் மே 13 மற்றும் 20 தேதிகளில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆலம்கிர்ஆலம் உதவியாளர் சஞ்சீவ்லால் என்பவரது வீட்டில் பீரோவில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.25 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், பணம் எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.