ADDED : ஆக 16, 2025 07:36 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் கல்வியமைச்சர் ராம்தாஸ் சோரன் சிகிக்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 62.
ஜார்க்கண்ட் மாநில கல்வியமைச்சராக செயல்பட்டு வந்தவர் ராம்தாஸ் சோரன். முதல்வர் ஹேமந்த சோரனுக்கு நெருக்கமானவர். (உறவினர் அல்ல)கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், ஆக.2ம் தேதி ஜாம்ஷெட்பூரில் இருந்து அழைத்து வரப்பட்டு டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து பல நாட்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த ராம்தாஸ் சோரன் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்த நிலையில் காலமானார்.
ராம்தாஸ் சோரனின் மறைவுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எங்களை விட்டுவிட்டு போய் இருக்கக்கூடாது என்று தமது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார். அவரின் பங்களிப்பு மாநில அரசில் என்றுமே நினைவில் நிற்கும் என்று கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங் தெரிவித்துள்ளார்.
ராம்தாஸ் சோரன் மறைவை அறிந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ், பாஜ தலைவர் அர்ஜூன் முண்டா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.