ஜார்க்கண்ட் தேர்தலில் வி.ஐ.பி., வேட்பாளர்கள் நிலை இதோ
ஜார்க்கண்ட் தேர்தலில் வி.ஐ.பி., வேட்பாளர்கள் நிலை இதோ
UPDATED : நவ 23, 2024 07:56 PM
ADDED : நவ 23, 2024 10:39 AM

ராஞ்சி:ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
சம்பாய் சோரன் - (பா.ஜ.,)
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ., சார்பில், செரைகெல்லா தொகுதியில் போட்டியிட்டார். இவர், 1,19,379 ஓட்டுகள் பெற்று வென்றார். எதிர்த்து போட்டியிட்ட ஜே.எம்.எம்., வேட்பாளர் 98,932 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 95,612 ஓட்டுகள் பெற்று வென்றார். எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் கேமியேல் ஹெம்ப்ரோம் 55,821 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
மஹுவா மஜி (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ராஞ்சி தொகுதியில் போட்டியிட்ட மஹுவா மஜி தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் பா.ஜ., கட்சியின் சந்திரேஸ்வர் பிரசாத் சிங், 1,07,290 ஓட்டுகள் பெற்று வென்றார். மஜி, 85,341 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
கல்பனா சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி, கல்பனா சோரன் கண்டே தொகுதியில் போட்டியிட்டார். இவர் 1,19,372 ஓட்டுகள் பெற்று வென்றார். எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., கட்சியின் முனியா தேவி, 1,02,230 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
சுனில் சோரன் (பா.ஜ.,)
பா.ஜ., சார்பில் தும்கா தொகுதியில் போட்டியிட்ட சுனில் சோரன் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன், 95,685 ஓட்டுகள் பெற்று வென்றார். சுனில் சோரன், 81,097 ஓட்டுகள் பெற்றார்.
அஜோய் குமார் (காங்கிரஸ்)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர், அஜோய் குமார் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., கட்சியின் பூர்ணிசா சாகு, 1,07,191 ஓட்டுகள் பெற்று வென்றார். அஜோய் குமார், 64,320 ஓட்டுகள் பெற்றார்.
பன்னா குப்தா (காங்கிரஸ்)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர், பன்னா குப்தா ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் 1,02,880 ஓட்டுகள் பெற்று வென்றார். பன்னாகுப்தா, 87,913 ஓட்டுகள் பெற்றார்.