தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் ஜார்க்கண்ட் அரசுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்

மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் ஜார்க்கண்ட் அரசுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்

மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் ஜார்க்கண்ட் அரசுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்


ADDED : ஆக 18, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஞ்சி: ஜார்க்கண்டில், மாணவர்களின் தொடர் போராட்டத்தால், ஜே.எஸ்.எஸ்.சி., எனப்படும், ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை அம்மாநில அரசு ரத்து செய்தது. அத்தேர்வில் வெற்றி வெற்ற, 2,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரித்து இருப்பது அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜே.எஸ்.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைநகர் ராஞ்சியில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், ஜே.பி.எஸ்.சி., எனப்படும், ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணி முதல்நிலை தேர்வை ரத்து செய்யக் கோரிய மாணவர்கள், இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கவும் வலியுறுத்தினர்.

போராட்டத்துக்கு ஆதரவாக, கடந்த 1 முதல், மாணவர் அமைப்பு தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அரசு பேச்சு நடத்தியும், போராட்டத்தை மாணவர்கள் கைவிடவில்லை. போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததை அடுத்து, ஜே.எஸ்.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை ரத்து செய்வதாக, நேற்று முன்தினம் நள்ளிரவு ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.

அதே போல், ஜே.பி.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணி முதல்நிலை தேர்வையும் ரத்து செய்த மாநில அரசு, 2014 முதல், ‘டி.எஸ்.ஆர்.டேட்டா பிராசசிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற வெளி நிறுவனம் நடத்திய அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும் அறிவித்தது. இதை மாணவர்கள் கொண்டாடினார். கோரிக்கை நிறைவேறியதை அடுத்து, மாணவர் அமைப்பு தலைவர் வேதேந்திர நாத் மஹ்தோ, 16 நாட்களாக கடைப்பிடித்த உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டாலும், ஜே.எஸ்.எஸ்.சி., ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது, ஜார்க்கண்ட் அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர் கூறுகையில், ‘ஒருசிலர் செய்த தவறுக்காக எங்களை பலிகடா ஆக்குவதை ஏற்க முடியாது. ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மற்றொரு போராட்டத்தை நடத்த அரசு வழிவகை செய்துள்ளது. எங்களுக்கு நீதி கிடைக்க, சட்ட வழிகளை நாடுவோம்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us