ஜார்க்கண்ட் அமைச்சரை பதவி நீக்கம் செய்யணும்; சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் அமைச்சரை பதவி நீக்கம் செய்யணும்; சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்
ADDED : அக் 26, 2024 08:04 PM

ராஞ்சி: பா.ஜ., பெண் தலைவர் கீதா சோரன் குறித்தும் பெண்கள் குறித்தும் இழிவாக பேசிய ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் இர்பான் அன்சாரியை, அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தினார்.
ஜம்தரா தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் இர்பான் அன்சாரி, அதே தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் சீதா சோரன் குறித்து இழிவாக பேட்டியளித்தார்.
அன்சாரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கீதா சோரன், 'பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும் பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் சிவராஜ் சிங், அமைச்சர் பதவியிலிருந்து அன்சாரியை உடனே நீக்க வேண்டும் என முதல்வர் ஹேமந்த் சோரனை வலியுறுத்தினார்.
கீதா சோரன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள்; தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.