ஜார்க்கண்டில் சாலை விபத்து: 6 பேர் பலி; 2 பேர் படுகாயம்
ஜார்க்கண்டில் சாலை விபத்து: 6 பேர் பலி; 2 பேர் படுகாயம்
ADDED : ஜன 01, 2024 12:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 8 பேரில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் அதிவேகத்தில் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.