ADDED : ஆக 27, 2025 10:27 PM
புதுடில்லி:டில்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் ராதிகா கார்டனைச் சேர்ந்தவர் நஞ்சோத் கவுர். டில்லி ஓக்லா தொழிற்பேட்டை லால் சவுக் சாலையில் நேற்று காலை, 9:45 மணிக்கு சென்ற நஞ்சோத் கவுர் மீது, கார் ஒன்று மோதியது.
தூக்கி வீசப்பட்ட நஞ்சோத் கவுர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். கார் டிரைவர் தன் வாகனத்தைக் கூட எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தகவல் அறிந்து வந்த ஓக்லா தொழிற்பேட்டை போலீசார், நஞ்சோத் கவுரை மீட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், நஞ்சோத் கவுர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை, கையகப்படுத்தி, தப்பி ஓடிய கார் டிரைவரை தேடுகின்றனர்.