இரட்டை நிர்வாகம் எப்போதும் ஆபத்து தான் ; ஒமர் அப்துல்லா
இரட்டை நிர்வாகம் எப்போதும் ஆபத்து தான் ; ஒமர் அப்துல்லா
ADDED : டிச 14, 2024 07:51 PM

புதுடில்லி: யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்கும், ஆளும் அரசுக்கும் அதிகாரம் கொடுத்திருப்பது எப்போதுமே ஆபத்து தான் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முக்கிய அரசியல் பிரச்னைகள், இண்டியா கூட்டணி தலைமை, 370 சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பேசினார்.
அவர் கூறியதாவது; இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நியமிக்க முயற்சி செய்தோம். ஆனால், அவரது தலைமையை கூட்டணியில் குறிப்பிட்ட சிலருக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை அவரை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருந்தால், அவர் தொடர்ந்து எங்களுடனே இருந்திருப்பார்.
யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்கும், ஆளும் அரசுக்கும் அதிகாரம் கொடுத்திருப்பது, ஆபத்துக்கு வழிவகுக்கும். மாநிலங்களுக்கான அந்தஸ்த்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வந்து ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க விரும்புகிறோம்.
'நண்பர்களை மாற்றி கொள்ள முடியும். ஆனால், நமது அண்டை நாட்டை மாற்ற முடியாது, என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய்' கூறியது உண்மைதான். பாகிஸ்தானுடனான மோதல்களை பேச்சுவார்த்தையின் மூலம் தான் தீர்க்க வேண்டும். போர் தீர்வாகாது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய பொறுப்பு நம் நாட்டிற்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் உண்டு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடும் தான், எனக் கூறினார்.