ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா காலமானார்
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா காலமானார்
ADDED : டிச 23, 2025 10:23 PM

ராய்ப்பூர்: ஹிந்தி எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லா 89,
இன்று(டிசம்பர் 23) காலமானார்.
வயது முதிர்வு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று
மாலை உயிரிழந்தார்.
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதை (2024-25) சமீபத்தில் பெற்றார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இந்த விருதைப் பெற்ற முதல் எழுத்தாளர்.வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், 1999-ல் சாகித்ய அகாடமி விருதையும், 2023-ல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பென்,நபோகோவ் விருதையும் வென்றுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு:
ஞானபீட விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஹிந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

