ADDED : ஜூலை 13, 2025 11:21 PM

கடந்த ஐந்து ஆண்டுகளில் பீஹாரில், 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 39 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளோம். 50 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 1 கோடியாக அதிகரிக்கும்.
நிதிஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
கட்கரிக்கான நேரமிது!
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்ததன்படி, 75 வயது கடந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்றால், அடுத்த பிரதமராக நிதின் கட்கரி நல்ல தேர்வாக இருப்பார். சாமானிய மக்களுடன் பழகக்கூடிய தலைவரான இவர், நாட்டின் பிரதமர் ஆவதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
கோபாலகிருஷ்ணா, கர்நாடகா எம்.எல்.ஏ., காங்கிரஸ்
கொள்ளையடிப்பதே குறிக்கோள்!
உத்தவ் -- ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்தது, மஹாராஷ்டிராவுக்கு புதிய திசையை காட்டியுள்ளது. மாநிலத்திற்கும், மராத்தி மொழியின் பெருமைக்கும் ஆளும் பா.ஜ., அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. அனைத்து திட்டங்களிலும் அரசு பணத்தை கொள்ளை அடிப்பதே பா.ஜ., கூட்டணியின் குறிக்கோள்.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி.,உத்தவ் சிவசேனா பிரிவு