தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கடைசி போட்டியில் தோல்வியுடன் விடை பெற்றார் ஜான் சீனா

கடைசி போட்டியில் தோல்வியுடன் விடை பெற்றார் ஜான் சீனா

கடைசி போட்டியில் தோல்வியுடன் விடை பெற்றார் ஜான் சீனா


ADDED : டிச 14, 2025 12:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 12:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

WWE மல்யுத்த போட்டிகளில், 17 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான் சீனா, கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார்.

கிரிக்கெட் விளையாட்டிற்கு இந்தியாவில் தனி மவுசு இருப்பது போல WWE மல்யுத்த போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜான் சீனா.

*கடந்த 2002ம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

* அவர், அமெரிக்காவில் மல்யுத்த வீரர் கன்தர் உடன் நடக்கும் போட்டியே தன் கடைசி போட்டி என்றும், அதன் பிறகு ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருந்தார். அப்படி நடந்த போட்டியில் 'டேப் அவுட்' முறையில் ஜான் சீனா தோல்வியை தழுவினார்.

*போட்டி முடிந்ததும், அவர் ரசிகர்களுக்கும், தன்னுடன் மோதிய வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஜான் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

யார் இந்த ஜான் சீனா

* 1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஜான் சீனா பிறந்தார். WWE மல்யுத்த வீரரான இவர், படங்கள், தொடர் நாடகங்கள், வீடியோ கேம்ஸ், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.

* இவர் கலிபோர்னியாவில் உள்ள பல்கலையில் பயிற்சி பெற்றார். 2001ம் ஆண்டு உலக மல்யுத்த கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us