அடர்ந்த வனப்பகுதிக்குள் 'ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி'
அடர்ந்த வனப்பகுதிக்குள் 'ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி'
ADDED : செப் 19, 2024 05:54 AM

உடுப்பி மாவட்டம், ஹெப்ரியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம். அடர்ந்த வனப்பகுதியில், 20 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி. இது சீதா நதியால் உருவான நீர் வீழ்ச்சியாகும்.
ஜோம்லு நீர்வீழ்ச்சியின் சத்தம், பறவைகளின் கீச்சொலி, அமைதியான சூழல் ஆகியவை நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் கூட்டுகின்றன.
வார இறுதியை, குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட ஏற்ற இடமாகும். புத்துணர்ச்சியூட்டும் நீரில் குளிப்பதற்கும் ஏற்றது.
அடர்ந்த வனப்பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. நீரில் குளித்தவுடன் பசி எடுப்பது வாடிக்கை. எனவே, கையோடு உணவு, தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
நீரில் குளிக்க மட்டுமல்ல, மீன் பிடிக்க துாண்டிலும் எடுத்துச் செல்லலாம். உள்ளூர் மக்கள் வாரந்தோறும் இங்கு வந்து வார இறுதி நாட்களை செலவழிக்கின்றனர்.
20 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி.