ADDED : மார் 05, 2026 02:33 AM

புதுடில்லி: டில்லியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஹெச்.கே.துவா. இவர், 'தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டிரிப்யூன், தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஆகிய பத்திரிகைகளின் செய்திப் பிரிவில் தலைமை பொறுப்பு வகித்தவர்.
பணி ஓய்வுக்கு பின் குடும்பத்தினருடன் டில்லியில் வசித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன் துவாவுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கூர்மையான அரசியல் நுண்ணறிவு வாயிலாக, அதிரடியாக பல்வேறு தலையங்கங்களை எழுதி, பத்திரிகை உலகின் ஜாம்பவனாக துவா திகழ்ந்தார்.
கடந்த 2009ல், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இவரை ராஜ்யசபா எம்.பி.,யாக நியமித்தது.
கடந்த 2015 வரையிலான தன் பதவிக்காலத்தில், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை துவா வழங்கினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தேவகவுடா ஆகியோருக்கு ஊடக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 2001 - 03 வரை டென்மார்க் நாட்டின் இந்திய துாதராகவும் துவா இருந்துள்ளார்.
