போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய நீதிபதி : விளக்கம் கேட்டு டி.ஜி.பி.க்கு சம்மன்
போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய நீதிபதி : விளக்கம் கேட்டு டி.ஜி.பி.க்கு சம்மன்
ADDED : ஆக 28, 2024 02:47 AM

ராஞ்சி: போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதால் ஆத்திரமடைந்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் திவேதி, அம்மாநில டி.ஜி.பி.க்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சஞ்சய் குமார் திவேதி, கடந்த 23-ம் தேதி காலை வழக்கம் போல தன் இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு உயர்நீதிமன்றம் சென்றார்.
அப்போது இவர் செல்லும் சாலையில் பா.ஜ., யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அணியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
இதனால் மாற்று பாதையில் இவர் சென்ற கார் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. இதனால் சரியான நேரத்திற்கு நீதிமன்றம் செல்ல முடியாமல் அவதியுற்றார்.
இதையடுத்து மாநில காவல்துறை டி.ஜி..பி., அனுராக் குப்தாவிற்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். முறையாக அறிவிப்பு இல்லாமல் சரியான முறையில் போக்குவரத்தை சரியாததால் தாம் குறிப்பிட்ட நேரத்திற்கு நீதிமன்றம் செல்ல முடியாமல் தாமதம் ஏற்பட்டு விட்டதாக புகார் கூறினார்.

