ADDED : ஏப் 04, 2025 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில், அனைத்து நீதிபதிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒருமித்த கருத்தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்து விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன், டில்லியில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ரூபாய் நோட்டு கட்டுகள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

