ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை
ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை
ADDED : மே 06, 2024 04:48 PM

கரிம்நகர்: தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ம் தேதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்ததை அடுத்து கேரளாவில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். கடந்த ஏப்.,26ல் கேரளாவிலும் தேர்தல் முடிந்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள கரிம்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளரிடம் கூறியதாவது:
மோடி அலை வலுவான நிலையில் இருக்கிறது; இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஜூன் 4 (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். லோக்சபா தேர்தலில் தென்னிந்தியா முழுதும் மோடி அலை வீசப்போகிறது. இதுவரை இல்லாத அளவாக அதிக இடங்களில் பா.ஜ., வெற்றிப்பெறும். காங்கிரசுக்கு 50க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.