கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது : தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு
கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது : தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு
ADDED : ஆக 07, 2011 12:41 AM
பெங்களூரு : மைசூரு கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், .ஆர்.எஸ்., அணை நிரம்பி வழிகிறது. அணையின் நீர்மட்டம் 124.08 அடியாகும். தற்போது 120.52 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. நேற்று, அணைக்கு 25 ஆயிரத்து 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 11 ஆயிரத்து 899 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், மைசூரு, மாண்டியா மாவட்ட மக்கள், கே.ஆர்.எஸ்., அணையில் பூஜை செய்து வருகின்றனர். முதல்வர் சதானந்த கவுடா, அடுத்த வாரம் அணைக்கு சென்று பூஜை செய்யவுள்ளார். அணையின் பாதுகாப்பை முன்னிட்டும், தமிழக அரசின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், 15 ஆயிரத்து 687 கன அடி தண்ணீர், தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை எதிர்த்த, மைசூரு, மாண்டியா விவசாயிகள், தற்போது அணையில் நீர் நிரம்பி வழிவதால், எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை.