ADDED : ஜன 15, 2025 09:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: எந்த விதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு எனப்படுகிறது. திருடனை போல சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருவதால், கேரள மக்கள் இதை, கள்ளக்கடல் என அழைக்கின்றனர்.
இந்திய கடல் தகவல் சேவைகள் மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கேரளா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில், இன்றிரவு 11:30 மணி வரை, கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், 0.5 - 1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் உருவாகும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
கடலோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். படகுகள் சேதமடைவதை தவிர்க்க, கடலோரங்களில் போதிய இடைவெளியுடன் படகுகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.