ADDED : ஜன 18, 2024 05:11 AM
பெங்களூரு: “பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களால் கலபுரகி சிறை நிரம்பியுள்ளது,” என, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
தன் 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில், 'அமைச்சர் பிரியங்க் கார்கே பொறுப்பில் உள்ள கலபுரகியில் முறைகேடுகள் அதிகரித்துள்ளன. சிறையில் உள்ள விசாரணை கைதிகள், சிறை ஊழியர்கள் இடையே, கஞ்சாவுக்காக அடிதடி நடந்துள்ளது.
கலபுரகியில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. சிறைகள் ஊழல் கூடாரமாக மாறியுள்ளது' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியது.
இதற்கு பதிலடி கொடுத்து, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
கலபுரகி சிறையில் தற்போது பா.ஜ., தலைவர்கள், பிரமுகர்கள் நிரம்பியுள்ளனர். இங்கும் அவர்களின் அட்டகாசம் தொடர்கிறது. ஆனால், உங்களுக்கு அந்த சிந்தனை வேண்டாம். சிறைக்குள் இவர்களை ஒடுக்குவது எப்படி என்பது, எங்களுக்கு தெரியும்.
எதிர் வரும் நாட்களில், சிறையில் உள்ள யாருக்கு உயர் பதவி வழங்குவது, அடுத்த தேர்தலில் சீட் கொடுப்பது என, பா.ஜ.,வினர் ஆலோசிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.