கல்பாத்தி தேர் திருவிழா; முகூர்த்தகால் நடும் நிகழ்வு
கல்பாத்தி தேர் திருவிழா; முகூர்த்தகால் நடும் நிகழ்வு
ADDED : நவ 03, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு ; கல்பாத்தி தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக, சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்வு நேற்று நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மந்தக்கரை மகா கணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்னா மகா கணபதி கோவில்களில் தேர்த்திருவிழா, நவ., 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது.
திருவிழாவின் கொடியேற்றம் நவ., 7ம் தேதியும், 13, 14, 15 தேதிகளில் திருத்தேரோட்டமும் நடக்கிறது.
இந்நிலையில், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவிலில், திருவிழாவின் ஒரு பகுதியான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று வேதபாராயணத்துடன், ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியாவின் தலைமையில் நடந்தது.