sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடையாணி உடைந்த இடத்தில் கட்டப்பட்ட கம்ப்ளி சோமேஸ்வரர்

/

கடையாணி உடைந்த இடத்தில் கட்டப்பட்ட கம்ப்ளி சோமேஸ்வரர்

கடையாணி உடைந்த இடத்தில் கட்டப்பட்ட கம்ப்ளி சோமேஸ்வரர்

கடையாணி உடைந்த இடத்தில் கட்டப்பட்ட கம்ப்ளி சோமேஸ்வரர்


ADDED : பிப் 22, 2024 11:03 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில் இல்லாத ஊரில், குடியிருக்க வேண்டாம் என, முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு தகுந்தபடி மன்னராட்சி காலத்தில், அற்புதமான கோவில்கள் கட்டப்பட்டன. இவற்றில் கம்ப்ளியில் உள்ள சோமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.

விஜயநகரா, கம்ப்ளியின் இதய பகுதியில் வரலாற்று பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 900 ஆண்டுகள் வரலாறு உள்ளது. இங்கு குடி கொண்டுள்ள சோமேஸ்வரர், விஜயநகர சமஸ்தானத்தின் கம்பிலராயா, கன்டுகலி குமார ராமனின் குல தெய்வமாகும்.

கோவில் கருவறையில் உள்ள சோமேஸ்வரர் விக்ரகம், விஜயநகர ஆட்சி காலத்தை சேர்ந்த, அபூர்வமானது. 8 அடி உயரம் கொண்டது. சூரிய, சந்திரன் சிற்பங்கள் உள்ளன. கருவறை முன்பாக பைரவர் சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் 12 - 13வது நுாற்றாண்டில் உள்ளது.

சபை மண்டபம், வீரக்கல், புலியுடன் போராடும் வீரன் விக்ரகங்கள் உள்ளன. இங்கு குடிகொண்டுள்ள சோமேஸ்வரர் சக்தி வாய்ந்தவர். கம்பிலராயா, குமார ராமன் முக்கிய பணிகளுக்கு செல்லும் முன், சோமேஸ்வரரை தரிசனம் செய்த பின்னரே செல்வர். விஜயநகர சாம்ராஜ்யம் உருவானதில், சோமேஸ்வரர் அனுகிரஹம் உள்ளது என, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பல்லாள ராயன் என்ற மன்னர், சோமேஸ்வரர் விக்ரகத்தை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் (தற்போது கோவில் உள்ள இடம்) ஓய்வெடுக்க தங்குகிறார். நான்கு நாட்களுக்கு பின், புறப்பட தயாரான போது, வண்டியின் கடையாணி உடைகிறது. எனவே, பல்லாள ராயன் மறுநாள் புறப்பட முடிவு செய்து, அங்கேயே தங்குகிறார்.

அன்றிரவு உறங்கும் போது, அவரது கனவில் தோன்றிய சோமேஸ்வரர், 'என் விக்ரகம் உள்ள அதே இடத்தில் கோவில் கட்டு' என, கட்டளையிடுகிறார். அதன்படி அங்கு கோவில் கட்டி, சோமேஸ்வரரை பிரதிஷ்டை செய்தார். அதன்பின் ஆட்சிக்கு வந்த மன்னர்கள், கோவிலை பெரிதாக்கினர்.

இன்றளவும் கோவிலை சிறப்பாக பராமரிக்கின்றனர். ஆண்டு தோறும் திருவிழா நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us