தேவர் சங்க நிதிக்கு கலை நிகழ்ச்சி புதிய தலைவர் கனகராஜ் உறுதி
தேவர் சங்க நிதிக்கு கலை நிகழ்ச்சி புதிய தலைவர் கனகராஜ் உறுதி
ADDED : டிச 31, 2024 05:42 AM

பெங்களூரு: கர்நாடக தேவர் சங்கம் சார்பில், 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, 15வது ஆண்டு விழா, 2025ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீட்டு விழா பெங்களூரு தமிழ் சங்கத்தில் நேற்று முன் தினம் நடந்தது.
சங்க தலைவர் சுப்பையா தேவர் தலைமையும், கர்நாடக தேவர் சங்க வங்கி தலைவர் ச.ஞானகுரு தேவர் முன்னிலையும் வகித்தனர்.
மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், பெங்களூரு மாநகராட்சி கல்வி குழு முன்னாள் தலைவர் தன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் பிரதீபா தன்ராஜ், லட்சுமி முறுக்கு மிஷின் உரிமையாளர் உசிலம்பட்டி பிரகாஷ் பங்கேற்றனர். பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் பொது செயலர் ஸ்ரீதரன் இறை வணக்கம் பாடினார்.
புதிய தலைவராக கனகராஜ், பொது செயலராக தன்ராஜ் தேவர், பொருளாளராக பாண்டியராஜா, துணைத் தலைவர்களாக அண்ணாதுரை, முருகன், ஒருங்கிணைப்பு செயலராக மனோகர், ஒருங்கிணைப்பு இணைச் செயலராக மணிகண்ட பிரபு உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும், கோவிந்தராஜ் தேவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் செயலர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் சம்பத், இந்து நாடார் சங்க நிர்வாகிகள், நெல்லை விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய தலைவர் கனகராஜ் பேசுகையில், ''சங்க நிதியை அதிகரிக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்துவேன்,'' என்றார்.
சங்கத்தின் 2025ம் ஆண்டு காலண்டர் வீரய்யா தேவர், கந்தன் தேவர், மணிகண்ட தேவர், வி.சுப்பையா தேவர், மாநில மகளிர் அணி தலைவி பத்மா நாச்சியார், வங்கி தலைவர் டாக்டர் ஞானகுரு தேவர், பாபு கே.தேவர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.