ADDED : நவ 19, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் தாலுகா, நகராட்சி சார்பில் கனகதாசர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ராபர்ட்சன்பேட்டை நகராட்சி விளையாட்டு மைதானத்திலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறுவர் பூங்காவிற்கு பல தரப்பினரும் ஊர்வலமாக வந்தனர்.
கனகதாசர் படம் அலங்கரித்து, எடுத்து வரப்பட்டது. அங்குள்ள கனகதாசர் சிலைக்கு, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா மாலை அணிவித்தார்.
தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன்குமார், நகராட்சித் தலைவர் இந்திரா காந்தி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், குருபர் சங்கத்தினர் பங்கேற்றனர். கிராமிய கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.