திருப்பதி ஸ்ரீமடத்தில் காஞ்சி மடாதிபதிகள் அனுக்ரஹ பாஷணம்; பக்தர்களுக்கு ஆசி
திருப்பதி ஸ்ரீமடத்தில் காஞ்சி மடாதிபதிகள் அனுக்ரஹ பாஷணம்; பக்தர்களுக்கு ஆசி
ADDED : ஜூலை 23, 2025 11:47 AM

திருப்பதி:
திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரஸேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம் செய்து ஆசிர்வதித்தனர்.
காஞ்சி
மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்த்ர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருப்பதியில், அலிபிரி, ஸ்ரீமஹாபாதுகா
மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை துவங்கி ஆசி வழங்கி வருகின்றனர்.
இதனையடுத்து, திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் நேற்று வைதிக சமஷ்டி
பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும்
சாதுர்மாஸ்யத்தின் போது வைதிக பிக்ஷாவந்தனம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று
நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி
சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரஸேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்
அனுக்ரஹ பாஷணம் செய்து ஆசிர்வதித்தனர். தொடர்ந்து பாத பூஜை நடந்தது.
பூஜ்ய
சங்கராச்சாரியார் சுவாமிகள் முத்ராதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். தொடர்ந்து சுவாமிகள், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கி ஆசி வழங்கினார். செப்டம்பர் 7ம் தேதி
பாத்ரபத பூர்ணிமையன்று விஸ்வரூப யாத்திரையுடன் நிறைவு பெறுகிறது.