ADDED : டிச 02, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன், சக்லேஸ்புராவை சேர்ந்தவர் நடிகை ஷோபிதா சிவண்ணா, 27. இவர் கன்னடத்தில் எரடொந்த்லா மூரு, ஏ.டி.எம்., ஜாக்பாட் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். அது மட்டுமின்றி 'மீனாட்சி மதுவே, கோகிலே' என, பல சின்னத்திரை தொடர்களில் நடித்தவர்.
இவர் நடித்த 'பிரம்ம கன்டு' தொடர், அவருக்கு திருப்பு முனையாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாதில் வசிப்பவரை திருமணம் செய்து கொண்ட ஷோபிதா, நடிப்பில் இருந்து ஒதுங்கினார். ஹைதராபாதில் கணவர் வீட்டில் வசித்தார்.
இதற்கிடையில் நேற்று அதிகாலை, ஷோபிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
- நமது நிருபர் -