உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு கபில்சிபல் போட்டி
உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு கபில்சிபல் போட்டி
ADDED : மே 08, 2024 08:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பதவிக்கு பிரபல மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் , போட்டியிடுகிறார்.
காங்., முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், 1989-90 களில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார்.
1995, 2002ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சராகவும், மூன்று முறை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர், செயலர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு கபில்சிபல் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே.18-ம் தேதியும், மே.19-ல் முடிவு வெளியிடப்பட உள்ளது.

