UPDATED : ஜூலை 26, 2024 11:07 AM
ADDED : ஜூலை 26, 2024 08:52 AM

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25 வது நினைவு நாளையொட்டி இன்று ( ஜூலை 26) காலை பிரதமர் மோடி கார்கில் சென்றார். அங்கு நடக்கும் நினைவு நாள் நிகழ்ச்சியில், பங்கேற்று நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார்.
கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாக்., ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனையடுத்து நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். கார்கிலில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர்த்தியாகம் பல செய்து பாகிஸ்தான் படையினரை நமது இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர்.
இதனை நினைவு கொள்ளும் வகையிலும். இந்த முறை 25 வது ஆண்டு சில்வர் ஜூப்ளி என்பதாலும் பிரதமர் மோடி இன்று சென்றார்.