ADDED : டிச 31, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹலசூரு: கல்லஹள்ளி ஸ்ரீகரிமலைவாசன் அய்யப்பா அறக்கட்டளை சார்பில், நாளை 44ம் ஆண்டு அய்யப்ப பூஜை நடத்தப்படுகிறது.
நாளை காலை 9:45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை; 10:00 மணிக்கு அபிேஷகம், பஜனை; 11:00 மணிக்கு 108 விளக்கு பூஜை எனும் மாங்கல்ய பூஜை; மதியம் 1:00 மணிக்கு சத்சங் மற்றும் பக்தர்களுக்கு சமபந்தி உணவு வழங்கப்படுகிறது.
பூஜைகளை சுகுமாறன் குருசாமி நடத்துகிறார். முரளி குருசாமி, ஜெயராம் குருசாமி ஆகியோர் அபிஷேகம், அலங்காரம் செய்கின்றனர். ஸ்ரீதரன் குருசாமி மற்றும் சிவனடியார்களின் பஜனை நடக்கிறது. தர்மகர்த்தா ராமராஜ் அன்னதானம் வழங்குகிறார்.
மேலும் விபரங்களுக்கு 93413 15907, 99004 86313 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.