கர்நாடக முதல்வரின் விமான பயணத்துக்கு ரூ.47 கோடி செலவு
கர்நாடக முதல்வரின் விமான பயணத்துக்கு ரூ.47 கோடி செலவு
ADDED : டிச 11, 2025 10:22 PM

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த 2023 முதல் 2025 வரையிலான விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணத்துக்கு மாநில அரசு 47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா உள்ளார். முதல்வர் பதவி குறித்து அவருக்கும், துணை முதல்வராக உள்ள சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்களும் டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து வந்தனர். இதன் பிறகு மேலிட தலைவர்களின் ஆலோசனைப்படி, இருவரும் உணவு விருந்தில் சந்தித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில், சித்தராமையாவின் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஆன செலவு குறித்த தகவலை சட்டமேலவை பாஜ உறுப்பினர் ரவிக்குமார் கேட்டு இருந்தார்.இதற்கு மாநில பொதுப்பணித்துறை அளித்த தகவலில் 2023 மே முதல் 2025 நவம்பர் வரை முதல்வரின் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணத்துக்கு 47 கோடி ரூபாய் செலவானது. கர்நாடகா மாநிலத்துக்கு உள்ளும், டில்லி, மும்பை, ஐதராபாத், சென்னை மற்றும் ஷீரடி ஆகிய நகரங்களுக்கு அலுவல் ரீதியில் முதல்வர் பயணம் மேற்கொண்டார்
2023 -24 நிதியாண்டில் முதல்வரின் பயணத்துக்கு, 12.23 கோடி ரூபாய் செலவானதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெங்களூருவின் எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து மைசூரு, ஹூப்ளி, பெலகாவி மற்றும் கலபுர்கி ஆகி யநகரங்களுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
2024 -25 நிதியாண்டில், பயணச் செலவு அதிகரித்து 21.11 கோடி ரூபாய் ஆகியுள்ளது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் உடுப்ப, சித்ரதுர்கா, ஹவேரி, பிதர் மற்றும் கல்புர்கி நகரங்களுக்கும், சென்னை , ஐதராபாத் உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கும் முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார். 2025 அக்., முதல் நவ., 2025 வரையில் மட்டும், முதல்வரின் விமான பயணத்துக்கு ரூ.14.03 கோடி செலவாகியுள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

