தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தலா 2 திருமணம் செய்யும் எம்எல்ஏ.,க்கள்; கர்நாடகா முதல்வர் பேச்சால் சர்ச்சை

தலா 2 திருமணம் செய்யும் எம்எல்ஏ.,க்கள்; கர்நாடகா முதல்வர் பேச்சால் சர்ச்சை

தலா 2 திருமணம் செய்யும் எம்எல்ஏ.,க்கள்; கர்நாடகா முதல்வர் பேச்சால் சர்ச்சை

1


ADDED : செப் 26, 2026 11:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:38 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு வரும் பிற பகுதிகளின் எம்எல்ஏக்கள் திரும்பி செல்வதில்லை, அவர்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

கர்நாடகா சட்டசபையில் மாநிலத்தின் வறட்சி நிலவரம், பெங்களூரு நகரமயமாக்கல், உயரும் மக்கள் தொகை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது;

பல ஆண்டுகளாக பெங்களூரு நகரமானது பலதரப்பட்ட மக்களை ஈர்த்து வருகிறது. இங்கு குடிபுகுந்த பலரும், மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது இல்லை.

இங்கு வரும் நீங்களே கூட(எம்எல்ஏக்களை குறிப்பிடுகிறார்) இங்கிருந்து செல்வதில்லை. பெங்களூரு வரும் அனைவருக்கும் இரண்டு திருமணங்கள் ஆகின்றன. 12 எம்எல்ஏக்கள் அவ்வாறு இருக்கின்றனர். என்னால் அந்த பட்டியலை தரமுடியும்.

தார்வார்ட், கார்வார் மற்றும் தட்சிண கன்னடா உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள் குறித்த விவரங்களை என்னால் வழங்க முடியும்.

இவ்வாறு முதல்வர் டி.கே. சிவகுமார் பேசினார்.

அவரின் இத்தகைய பேச்சுக்கு, சட்டசபையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சி தலைவர் அசோகா பேசுகையில், 'முதல்வரின் இந்த பேச்சு தேவையற்றது. அவர் கூறிய அந்த 12 எம்எல்ஏக்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இந்த பேச்சு, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்த பல எம்எல்ஏக்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நானும் பெங்களுருவில் தான் பிறந்து வளர்ந்தேன்' என்றார்.

பாஜ மூத்த எம்எல்ஏ சுரேஷ்குமார் பேசுகையில்,' முதல்வர் நகைச்சுவையாக குறிப்பிட்டு இருந்தாலும் அவரின் இந்த பேச்சு தேவையற்றது. சட்டசபையில் இவ்வாறு பேசுவது அவரின் கண்ணியத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தாது. அந்த 12 எம்எல்ஏக்களின் பெயர்களை வெளியிடவேண்டும்' என்று வலியுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us