பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்; கர்நாடகாவில் அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்; கர்நாடகாவில் அறிவிப்பு
ADDED : பிப் 26, 2025 06:59 AM

பெங்களூரு; கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி, பி.யூ.சி பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் 10ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி., பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி நடக்கிறது. ஏப்ர்ல் 4ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்காக மாணவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பஸ்களில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம். பயணத்தின் போது அவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டு செல்ல வேண்டும். தங்கள் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தேர்வுக்கூடம் இருக்கும் பகுதி வரை அவர்கள் சாதாரண வகை பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
மேலும், கூடுதல் பஸ் சேவை தேவை என்னும் பட்சத்தில் அதற்கான கோரிக்கையை முறைப்படி வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.

