புரோகிதரை திருமணம் செய்தால் பிராமண பெண்ணுக்கு ரூ.3 லட்சம்
புரோகிதரை திருமணம் செய்தால் பிராமண பெண்ணுக்கு ரூ.3 லட்சம்
ADDED : ஜன 04, 2025 12:09 AM
பெங்களூரு:   அர்ச்சகர், புரோகிதர்களை திருமணம் செய்து கொள்ள முன்வரும் பிராமண பெண்களுக்கு, கர்நாடக அரசு 3 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கர்நாடகா அரசு வெளியிட்ட சுற்றறிக்கை:
'மைத்ரேயி' திட்டம்
ஏழை பிராமண இளம்பெண்களுக்கு, 'அருந்ததி' என்ற திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி உள்ளது.   இத்திட்டம் பிராமணர் மேம்பாட்டு ஆணையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
ஏழை பிராமணர் சமுதாய பெண்களின் திருமணத்தின்போது, 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அர்ச்சகர்கள், புரோகிதர்களை திருமணம் செய்து கொள்ள, இளம் பெண்கள் தயங்குகின்றனர். எனவே 'மைத்ரேயி' திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அர்ச்சகர், புரோகிதர்களை திருமணம் செய்ய முன்வரும், பிராமண இளம்பெண்களுக்கு 'மைத்ரேயி' திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு 3 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அருந்ததி, மைத்ரேயி திட்டங்களுக்கு, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இணையதளம்
கர்நாடக பிராமணர் மேம்பாட்டு ஆணையத்தின்   அதிகாரப்பூர்வ இணையதளம்https:ksbdb.karnataka.gov.in/englishல் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

