sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 காங்.,கின் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்கு விளம்பரங்களை அள்ளிவிட்ட கர்நாடக அரசு

/

 காங்.,கின் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்கு விளம்பரங்களை அள்ளிவிட்ட கர்நாடக அரசு

 காங்.,கின் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்கு விளம்பரங்களை அள்ளிவிட்ட கர்நாடக அரசு

 காங்.,கின் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்கு விளம்பரங்களை அள்ளிவிட்ட கர்நாடக அரசு

3


ADDED : ஜன 08, 2026 11:48 PM

Google News

ADDED : ஜன 08, 2026 11:48 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தேசிய நாளிதழ்களை புறந்தள்ளிவிட்டு, சொந்த கட்சி நடத்தும், 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்கு அதிக வருவாய் கிடைப்பதற்காக, அரசு விளம்பரங்களை கர்நாடக அரசு வாரி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு, நேஷனல் ஹெரால்டு. டில்லியில் மட்டும் மிகச்சிறிய அளவில் இந்த பத்திரிகை விற்பனை செய்யப்படுகிறது.

1.90 கோடி ரூபாய்


தேசிய அளவில் இந்த பத்திரிகைக்கு பெரிய அளவில் சந்தாதாரர்கள் இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை ஒன்று கூட விற்கப்படுவதில்லை.

இந்நிலையில், இந்த பத்திரிகை ஆதாயம் பெறும் வகையில், அரசு விளம்பரங்கள் அதிக அளவில் வழங்கப் பட்டுள்ளன.

தொடர்ச்சியாக கடந்த 2023 - 25ம் ஆண்டு வரை, 'நேஷனல் ஹெரால்டு'க்கு வழங்கப்பட்ட விளம்பரங்களில் பாதி கூட, மக்கள் அதிகம் படிக்கும் தேசிய நாளிதழ்களுக்கு தரப்படவில்லை.

அதாவது, கடந்த 2023 - 2025ம் ஆண்டில் பத்திரிகை விளம்பரத்திற்காக கர்நாடக அரசு செலவிட்ட தொகையில், 'நேஷனல் ஹெரால்டு'க்கு மட்டும், 1.90 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.அதே போல், விளம்பரத்திற்காக கடந்த 2024 - 2025ல் மொத்தமாக 1.42 கோடி ரூ பாயை கர்நாடக அரசு செலவிட்டது.

அதில் 99 லட்சம் ரூபாய், அதாவது 69 சதவீத தொகை, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்கு சென்று உள்ளது.

என்ன காரணம்


'கர்நாடகாவில் விற்பனையே ஆகாத ஒரு நாளிதழுக்கு அரசு தன் விளம்பரத்தை தர என்ன காரணம்? மக்களின் வரிப்பணத்தை சொந்த கட்சி பலன் அடையும் வகையில் மடை மாற்றுவது எந்த விதத்தில் நியாயம்?' என கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வருமான அஷ்வத் நாராயண் கூறுகையில், “மக்களின் வரிப் பணத்தை காங்கிரஸ் மிக வெளிப்படையாக திருடி இருக்கிறது.

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையில் நடந்த முறைகேடுகள் குறித்து அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.

'இந்தச் சூழலில், அந்த பத்திரிகைக்கு மட்டும் அதிக அளவில் விளம்பரம் கொடுத்ததற்கு என்ன காரணம் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்,” என்றார்.

'நேஷ னல் ஹெரால்டு' பத்திரிகைக்கு அதிக விளம்பரம் ஒதுக்கியதில் எந்த தவறும் இல்லை என்றும், அது ஒன்றும் தேசவிரோத செயல் இல்லை என்றும் காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us